Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு விஜய் வருவாரா மாட்டாரா?
முகப்பு
வீடியோ
தமிழகம்
போட்டோ
இந்தியா
வணிகம்
ஆன்மீகம்
உலகம்
விளையாட்டு
சினிமா
ஹெல்த்
வைரல்
ஆன்மிகம்
பல்சுவை
டெக்
Home> Tamil Nadu
Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு விஜய் வருவாரா மாட்டாரா?
Vijay Participating In Kalaingar 100 Event : திரைத்துறையினர், அரசியல் கட்சித்தலைவர்கள் என பலர் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழவிற்கு விஜய் வருவாரா மாட்டாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
Updated: Jan 06, 2024, 05:09 PM IST
விஜய் கலைஞர் 100 விழாவிற்கு வருவாரா?
திரையுலகினர் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
சமூக வலைதளங்களில் விஜய் ட்ரெண்டாகி வருகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா, இன்று (ஜனவரி 6) கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள திரையுலகினருக்கும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் விஜய் கலந்து கொள்வாரா இல்லையா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.
முத்தமிழ் அறிஞரும், மூத்த கலைஞருமான கருணானிதிக்கு கடந்த ஆண்டே நூற்றாண்டு விழா நடைபெற இருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக இந்த விழா ஒத்திப்போனது. சேப்பாக்கத்தில் இந்த விழாவை நடத்த இருந்த திமுகவினர், பின்பு இதற்கான இடத்தை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானமாக மாற்றினர். கடந்த ஒரு வார காலமாக, இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைப்பெற்று வந்தது. பெப்சி தொழிலாளர்கள் பலர் இந்த விழாவிற்காக பணியாற்றி உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.