காபூலுக்கு வந்தது முதல் விமானம்

14.09.2021 10:54:52

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி பின், காபூல் விமான நிலையத்திற்கு, வெறும் 10 பயணிகளுடன் பாகிஸ்தானில் இருந்து முதல் விமானம் வந்திறங்கியுள்ளது.


ஆப்கானிஸ்தான் கடந்த ஆக.,15ம் தேதி தலிபான்கள் வசமானது. தற்போது அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. முல்லா முகமது ஹசன் அகுந்த் அந்நாட்டின் இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்று உள்ளார். அங்குள்ள காபூல் விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகளைக் கத்தார் அரசு மேற்கொண்டு உள்ளது.


இந்நிலையில், ஆப்கன் சர்ச்சைக்குப் பின், அந்நாட்டுடன் முதல் வர்த்தக ரீதியான போக்குவரத்தை பாகிஸ்தான் தொடங்கி உள்ளது. இன்று (செப்., 13) காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்துக்கு பாகிஸ்தானில் இருந்து ஜெட் ரக விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தில் வெறும் 10 பேர் மட்டுமே இருந்தனர். அதிலும் பெரும்பாலானோர் விமான சிப்பந்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.