மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து வைக்கும் விஜய்!
|
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதல்வர் விஜய் தண்ணீரை திறந்து வைக்கிறார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 கன அடியை கடந்துவிட்ட சூழலில், இன்று முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கனடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்பின் பாசனத்தின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
டெல்டா பாசன வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பாததால், ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்தனர். தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 90 கன அடியை கடந்துவிட்ட சூழலில், இன்று முதல்வர் விஜய் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட இருக்கிறார். இன்று முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது. அதன்படி பாசனத்தின் தேவைக்கேற்ப தண்ணீர் அளவு படிப்படியாக உயர்த்தப்பட உள்ளது. முதல்வரான பின் விஜய் முதல்முறையாக மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளார். இது தவெகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட விமான நிலையம் வரும் முதல்வர் விஜய், பின்னர் சாலை வழியாக பயணித்து மேட்டூர் அணை செல்கிறார். முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி மேட்டூர் அணைப் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மேட்டூர் அணையில் நீர்வளத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை குறித்த புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் விஜய் பார்வையிடுகிறார். பின்னர் மேட்டூர் அணை மின் நிலையத்தை பார்வையிடும் விஜய், தொடர்ந்து சேலம் விமான நிலையம் வந்து சென்னை திரும்புகிறார். விஜய்யின் வருகையையொட்டி மேட்டூர் அணைக்கு செல்லும் சாலையின் இரு பக்கமும் இரும்பு கம்பிகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பாதையில் வந்துவிடக் கூடாது என்பதால், பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விமான நிலையம் முதல் மேட்டூர் அணை வரை வழியெங்கும் தவெக கட்சி கொடி கட்டப்பட்டுள்ளது. |