புதிய பிரதமராகிறார் ரிஷி சுனக்

25.10.2022 09:00:48

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக் பதவியேற்கவுள்ளார். 

கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டதையடுத்தே அவர், பிரதமராக பதவியேற்கவுள்ளார். 

கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு, முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் போரிஸ் ஜான்சன் விலகுவதாக  அறிவித்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மோர்டான்ட் விலகுவதாக அறிவித்தையடுத்து, கட்சி ரிஷி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பிரமராக கடந்த 5ஆம் திகதி பதவியேற்ற லிஸ் டிரஸ், 20ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.