சொகுசுக் கப்பலில் பரவிய ஹன்டா வைரஸால் 40 பேருக்கு பாதிப்பு!

09.05.2026 13:52:46

நெதர்​லாந்து சொகுசுக் கப்​பலில் பணி​யாற்​றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்​பட்டுள்​ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெதர்​லாந்தைச் சேர்ந்த எம்​.​வி.ஹோண்​டியஸ் என்ற சொகுசுக் கப்​பல், கடந்த மாதம் முதலாம் திகதி அர்​ஜென்​டி​னா​வின் உஷு​வாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்​கியது. இதில் 150 பயணி​கள் மற்​றும் மாலுமிகள் உட்பட 72 ஊழியர்​கள் இருந்​தனர்.

 

அண்​டார்​டிகா மற்​றும் தெற்கு அட்​லான்​டிக் பகு​தி​களின் தீவு​களுக்கு சொகுசு கப்​பல் பயணம் மேற்​கொண்​டது. புறப்​பட்ட சில நாட்களிலேயே 3 பயணிகள் ஹன்டா வைரஸ் பாதிப்​பால் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து மேற்கு ஆப்​பிரிக்க கடற்​கரை பகு​தி​யில் முகாமிட்​டிருந்த சொகுசுக் கப்​பல் தற்​போது நெதர்​லாந்​தின் டெனெரிப் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்​ளது. அங்கு பயணி​களுக்கு மருத்​துவ பரிசோதனை​கள் நடத்தப்பட்டன.

ஹன்டா வைரஸ் பாதிப்பு இல்​லாத பயணி​கள் மட்​டும் அவர​வர் நாடு​களுக்கு திரும்​பிச் செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டது. எலிகள் மூலம் மனிதர்​களுக்கு ஹன்டா வைரஸ் பரவு​கின்றது. குறிப்​பாக எலிக் கழி​வு​கள் படிந்த இடங்​களைச் சுத்​தம் செய்யும்போது மனிதர்​களுக்கு வைரஸ் பரவு​கின்றது.

மேலும் எலிக் கழி​வு​களின் நுண்​துகள்​கள் காற்​றில் கலந்​து, அவற்றை சுவாசிப்​ப​தன் மூல​மும் ஹன்டா வைரஸ் தொற்று ஏற்படு​கிறது. இந்த வைரஸைக் குணப்​படுத்த மருந்​துகள் இல்​லை. எனினும் இது கொரோனா வைரஸ் போன்று பரவ வாய்ப்​பில்​லை என இந்​திய சுகா​தா​ரத் துறை வட்​டாரங்​கள் கூறியுள்ளன.