ரஷ்யாவின் போர்க்கப்பல் மூழ்கடிப்பு

06.03.2024 07:00:00

கீவ்: ரஷ்யா- உக்ரைன் போர் நீடித்து வருகின்றது. இருநாடுகளும் மாறி மாறி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன. ஏற்கனவே ரஷ்யாவுக்கு சொந்தமான போர்கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது. பிப்ரவரி ஒன்று மற்றும் 14ம் தேதி கருங்கடலில் ரஷ்யாவின் கப்பல்களை டிரோன் மூலமாக தாக்கியதாக உக்ரைன் அறிவித்தது. எனினும் ரஷ்யா அதிகாரிகள் இதனை உறுதிபடுத்தவில்லை.

இந்நிலையில் ரஷ்யாவின் மற்றொரு ரோந்து கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கருங்கடலில் ரஷ்யாவின் ரோந்து கப்பலான செர்ஜி கோடா உக்ரைனில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட மற்றும் வெடிமருந்து நிரப்பப்பட்ட உயர் தொழிநுட்ப ஆளில்லா கடல் விமானம் மூலமாக தாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய கப்பலில் ஏவுகணைகள் மற்றும் சுமார் 60ஆயிரம் ஊழியர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. உக்ரைனின் அறிவிப்பு ரஷ்யாவால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.