ஸ்டாலின் பற்றி விஜய் கண்டனம்!.

03.10.2026 12:41:53

நேற்று தாராபுரத்தில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அந்த தொகுதி தவெக வேட்பார் பற்றி பேசும்போது சத்யபாமாவுக்கு மற்றொரு பெயர் உண்டு.. பெட்டி பாமா.. பல்டி பாமா..  பெட்டியை வாங்கிக்கொண்டு பல்டி அடித்திருக்கிறார்.. இந்த உருவத்தை வைத்துக்கொண்டு அவர் எப்படி பல்டி அடித்தார் என தெரியவில்லை’ என உருவ கேலி செய்திருந்தார்.. இதற்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
 

இந்நிலையில் இதற்கு கண்டம் தெரிவித்துள்ள முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘பெண்களை ஆபாசமாக பேசி வரும் தீய சக்தி திமுகவிற்கு தமிழக பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனம்.. திமுக இடைத்தேர்தல் பரப்பரை கூட்டத்தில் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து உருவக்கேலி செய்து மிகவும் அநாகரீகமாக பேசி புலகாங்கிதம் அடைந்துள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்..

பொதுக்கூட்டம் என்ற பெயரில் தீய சக்தியான திமுக சார்பில் ஒரு அவதூறு மற்றும் அநாகரிக கூட்டத்தை அவர் நடத்தியிருக்கிறார். திமுக சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாச நதியை, வன்மனதையே, வக்கிரநதியை உருவாக்கியது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்தான் என்பதை பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்’ என அவர் அதில் பதிவிட்டிருக்கிறார்..