ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்!
2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று அமரன். சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவான இப்படத்தை, கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தது. மேலும் சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன், மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. |
உலகளவில் ரூ. 300 கோடியை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அமரன் படம், இதற்கு முந்தைய வசூல் சாதனைகளையும் முறியடித்து வருகிறது. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வசூல் சாதனைகளை, அமரன் முறியடித்து வரும் நிலையில், இந்த வருடத்தின் நம்பர் 1 ஹீரோவாக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். புக் மை ஷோ இணையதளத்தில் இந்த ஆண்டு அதிக டிக்கெட்கள் அமரன் படத்திற்கு தான் புக் செய்யப்பட்டுள்ளது. 4.55 மில்லியன் டிக்கெட்கள் அமரன் படத்திற்கு புக் ஆகியுள்ளது. கோட் 4.5 மில்லியன் டிக்கெட்கள் புக் செய்யப்பட்டு 2இடத்தையும், வேட்டையன் 2.7 மில்லியன் டிக்கெட்கள் புக் செய்யப்பட்டு, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து ராயன், மகாராஜா, இந்தியன் 2 படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. |