4 தேசிய விருது வென்ற கலை இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம்
நிதின் தேசாய் பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க 'தேவதாஸ்', 'ஜோதா அக்பர்' மற்றும் 'லகான்' உள்பட ஏராளமான வெற்றி படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியவர் நிதின் தேசாய் (வயது 57). இவர் கலை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார். இவர் கடந்த ஆண்டில் சந்திரகாந்த் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தேஷ் தேவி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளாராக உருவெடுத்தார். இதையடுத்து நிதின் தேசாய் மும்பையில் உள்ள அவரது என். டி. ஸ்டுடியோவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். பல்வேறு படங்களில் தன் கலை திறமையை வெளிப்படுத்தியுள்ள நிதின் தேசாய் மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நிதின் தேசாய் கடன் பிரச்னையில் சிக்கி இருந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவரது என். டி. ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டதால் அவர் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.