இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது
21.03.2022 12:13:47
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(ஐஓசி) அறிவித்துள்ளது.
இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதே நோக்கம் என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்தார். எனினும், இந்த அறிவிப்பின் காரணமாக, மற்ற விநியோகஸ்தர்களிடமிருந்து எரிபொருளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.