தமிழ் பரா விளையாட்டு விழா - ஒலிம்பிக் சுடரேந்தல்

13.09.2022 15:14:55

தமிழ் மாற்றுத்திறனாளிகள்  விளையாட்டு விழாவான பரா விளையாட்டு போட்டிக்கான ஆரம்ப நிகழ்வுகள் நேற்று (12/09/2022) கோலாகலமாக ஆரம்பமானது ,அந்தவகையில் கிழக்கு மாகாணத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளூடாக ஒலிம்பிக் சுடரை ஏந்தி வெபர் மைதானத்தில் இன்றையதினம் சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

வரும் 24,மற்றும் 25 ஆம் திகதிகளில் இறுதி விளையாட்டு போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

ஒலிம்பிக் தீப பவனி நேற்று  வாகரை பிரதேச செயலர் பிரிவில் இருந்து ஆரம்பித்து இன்று மண்முனை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் முடிவடைந்து வெபர் விளையாட்டு மைதானத்தில் சுடரேற்றப்பட்டுள்ளது .

மேற்படி நிகழ்வில் பிரதேச ,மாவட்ட செயலக அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள் ,மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள் ,மாற்று திறனாளிகள் ,மற்றும் நலன்விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் ,பங்குகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.