உலக அழகி போட்டியில் மோசடி!
இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியில், உலக அழகியாக தேர்வாகி பட்டம் சூடினார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. உலக அழகி போட்டியில் மோசடி நடந்ததாக 'மிஸ் பார்படாஸ்' அழகி போட்டியில் பட்டம் வென்ற லீலானி மெக்கோனி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.உலக அழகி போட்டியில் 'தில்லுமுல்லு' நடைபெற்றதால் தான் பிரியங்கா சோப்ராவால் வெற்றி பெற முந்ததாக லீலானி மெக்கோனி கூறினார். அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற முன்னாள் உலக அழகிகளுக்கான போட்டியில், மோசடி நடந்ததாக கூறப்படும் நிலையில், இந்த போட்டியில் யார் வெற்றியாளர் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி. முன்னாள் உலக அழகிகளுக்கான இந்த போட்டியில், மிஸ் டெக்சாஸ் பட்டம் வென்ற அழகி ஆர்'போனி கேப்ரியல் வெற்றி பெற்றார். இந்த போட்டியில், ஸ்பான்சர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் தற்சார்பு நடவடிக்கை காரணமாகவே, ஆர்'போனி கேப்ரியல் நியாயமற்ற முறையில் வென்றார் என்று லீலானி மெக்கோனி கூறினார். மேலும், பிரியங்கா சோப்ரா மீதும் முன்னாள் மிஸ் பார்படாஸ் லீலானி மெக்கோனி சில திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதேபோல, உலக அழகி போட்டியில், பிரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக இந்திய டிவி அமைப்புகள் சில எடுத்த நடுநிலை தவறிய சார்பு நடவடிக்கையால் அவர் பட்டம் வென்றார் என்று பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். 2000ம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியை நடத்தும் ஸ்பான்சர் நிறுவனமாக இந்தியாவை சார்ந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இருந்ததால் தான் பிரியங்கா சோப்ராவால் வெற்றி பெற முடிந்தது. உலக அழகி போட்டியில், பிகினி ஆடை சுற்றில் பிரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக போட்டியை நடத்தும் நடுவர்கள் விதிகளை மீறியுள்ளனர் என்று லீலானி மெக்கோனி கூறினார். இதுபோன்ற பல சம்பவங்களை அவர் கூறியுள்ளார். இறுதியில், உலக அழகி போட்டியில் பிரியங்கா சோப்ரா தான் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் அறிந்த ஒரு வெளிப்படையான விஷயமாக இருந்தது. உலக அழகி போட்டியில் முறைகேடு நடந்தது என்று லீலானி மெக்கோனி கூறினார்.