“டொக்டர்” திரைப்படத்தின் வெளியீடு !

30.07.2021 11:45:15

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டொக்டர் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்டியில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.