துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' பட டிரைலர் வெளியானது
துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகயிருந்த நிலையில் இயக்குனர் சித்திக் மறைவயடுத்து டிரைலர் வெளியீட்டை படக்குழு ஒத்திவைத்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.