ஆன்மிக வாழ்க்கைக்குள் நுழைந்த பூஜா!

04.02.2024 13:31:59

இந்திய – இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தேசிய விருது பெற்ற பிரபல நடிகையான பூஜா உமாசங்கர், தனது கலை வாழ்க்கையை விட்டுவிட்டு ஆன்மீக வாழ்வில் நுழையத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனது தனிப்பட்ட சவால்கள் மற்றும் ஏமாற்றங்களால் மனமுடைந்த பூஜா, இலங்கையை விட்டு வெளியேறி சமீபத்தில் இந்தியா சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்களில் இலங்கையில் திரையிடப்பட்டு வரும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் சரோஷன்முகம் சிங்கள் திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாக கருதப்படுகிறது.

பூஜா இலங்கைக்கு திரும்புவதில்லை என்ற உறுதியான முடிவை எடுத்து தனது நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்.

இரண்டு திருமணங்களும் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த அவர், சில காலமாக அதிருப்தி உணர்வோடு பணியாற்றி வந்ததாகவும், அதன் விளைவாக ஆன்மீக வாழ்க்கைக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முடிவால் அவரது ரசிகர்கள் பலர் கவலையில் உள்ளனர்.