யாழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு கட்டளைகள்

17.02.2024 10:30:58

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு தீடீர் விஜயம் மேற்கொண்ட யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க இந்தக் கட்டளைகளை பிறப்பித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர் பொதுமக்களின் அன்றாட வாழ்வுக்கு இடையூறாக உள்ள குற்றச்செயல்களை விரைந்து தடுக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் அதன் பாவனையை முற்றாக ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளை பொலிஸார் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்ற ஆலோசனைகளையும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.