ரணிலின் கருத்தால் வெடித்தது சர்ச்சை

21.05.2022 09:17:23

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது. நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் போராட்டங்களில் பங்கேற்று புதிய அனுபவத்தைப் பெறலாம் என்று தெரிவித்தமையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

இதேவேளை இந்தப் பேட்டியில் விவசாயத்திற்கு தேவைாயான உரம் இல்லாமையினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையினால் கடனை திருப்பி செலுத்த முடியாததை முன்னிட்டு வெட்கப்படுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேபோல் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.