14 கிராம மக்கள் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழப்பு !

05.03.2021 07:59:02

 

வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான படாக்ஷனில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 14 கிராம மக்கள் உயிரிழந்துள்ளனர் மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் ராகிஸ்தான் மாவட்டத்தின் ஹவ்ஸ்-இ-ஷா பகுதியில் நடந்தது.

மலைப்பிரதேசத்தில் ஒரு மாவட்ட வீதியில் இந்த பேரழிவு ஏற்பட்டதாக, உள்ளூர் அரசாங்க செய்தித் தொடர்பாளர் செய்தித் தொடர்பாளர் நிக் முகமது உறுதிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.