படப்பிடிப்பு ‘சூர்யா 40’ பூஜையுடன் தொடங்கியது - சூர்யா பங்கேற்கவில்லை

15.02.2021 11:04:02

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகர் சூர்யா பங்கேற்கவில்லை.

சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. கொரோனா சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்து வருவதால் நடிகர் சூர்யா இதில் கலந்து கொள்ளவில்லை.