என் திறமையை கண்டுபிடித்தது வெற்றிமாறன் தான்
நடிகர் சூரி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘விடுதலை’. இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து 'விடுதலை' படத்தின் கதாநாயகன் சூரி மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 'விடுதலை' படம் குறித்தும் அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், இயக்குனர் வெற்றிமாறனுக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், நம்மிடம் இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடிப்பதற்கு முன்பு இன்னொருவர் கண்டுபிடிக்கிறது
பெரிய விஷயம். என்னிடம் இருக்கிற இந்த குமரேசனை கண்டுபிடித்ததற்கு வெற்றிமாறன் அண்ணாவிற்கு பெரிய நன்றி. இதற்கான தகுதியை ஏற்படுத்திய எனக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.