ஒரு பைசா கூட வருமானம் இல்லை: சந்தோஷ் நாராயணன்..!
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த தனி பாடலான 'எஞ்சாயி எஞ்சாமி' என்ற பாடல் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த பாடல் கிட்டத்தட்ட 50 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.
எனவே இந்த பாடல் மிகப்பெரிய வருமானத்தை யூடியூப் மூலமும் இசை நிறுவனம் மூலமும் கிடைத்திருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சற்று முன் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட வீடியோவில் இந்த பாடல் மூலம் எனக்கு இதுவரை ஒரு பைசா கூட வருமானம் வரவில்லை என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்
சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு நாங்கள் இது குறித்து தகவல் பெற முயற்சிக்கிறோம் என்றும் இந்த கசப்பான உணர்வு காரணமாக தான் நாங்கள் சொந்த மியூசிக் ஸ்டுடியோவை தொடங்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்
தனி இசை கலைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை என்று கூறியுள்ள சந்தோஷ் நாராயணன் இந்த பாடல் மூலம் யூடியூபில் வரும் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கு செல்கிறது என்றும் எங்களுக்கு எந்த வருமானமும் இதுவரை இந்த பாடலால் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது