மீண்டும் சிதறுகிறது மொட்டு

04.01.2023 22:07:28

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்துவரும் சில நாட்களுக்குள் சுயேட்சையாக இயங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சுயேட்சையாக இயங்கவுள்ள அணியில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சிக்குள் நடக்கும் சில நிகழ்வுகளால் கடும் அதிருப்தி

கட்சிக்குள் நடக்கும் சில நிகழ்வுகளால் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.

மொட்டுவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது சுயேட்சையாக செயற்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நெருங்கி வரவுள்ள நிலையில்

உள்ளூராட்சி தேர்தல் நெருங்கி வரவுள்ள நிலையில் பெதுஜன பெரமுனவில் ஏற்பட்டுள்ள விரிசல் கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.