
டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் காயம் காரணமாக ஐந்து இலங்கை வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
20.01.2021 11:24:20
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் காயம் காரணமாக ஐந்து இலங்கை வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், லஹிரு குமார, நுவான் பிரதீப், மினோத் பானுக்க ஆகிய ஐந்து வீரர்களுக்கே இவ்வாறு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பதிலாக ரோசன் சில்வா, லக்மால், ஓசத பெர்ணாண்டோ உள்ளிட்ட ஐந்து வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.