1000 கோடி இலக்கு வைத்த தமிழக அரசு!.
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைந்தவுடன் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களும், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கும் முறையை தடுக்கும் முயற்சியில் தவெக அரசு ஈடுபட்டது. அதில், ஓரளவுக்கு பலனும் கிடைத்திருக்கிறாது. ஒருபக்கம் முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் 707 டாஸ்மாக் மது கடைகளையும் மூடினார்..
அதேபோல் ஆன்லைனில் மதுவை புக் செய்துவிட்டு டாஸ்மாக் கடைக்கு சென்று அதை வாங்கிக் கொள்ளும் முறையும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் டாஸ்மாக் பார்களில் உணவகங்களையும் கொண்டு வரும் முயற்சியில் தவெக அரசு இறங்கியிருக்கிறது.
இந்நிலையில், டாஸ்மாக் மது விற்பனையில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி அமலுக்கு வந்திருக்கிறது. ஒரு பாட்டிலுக்கு அதிகபட்சம் 20 வரை வரியாக வசூலிக்க படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ஆயிரம் கோடி நிதி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம், இந்த வரி மதுபான பாட்டில் விலையில் சேர்க்கப்பட்டு மதுப்பிரியர்களிடம் வசூலிக்கப்படுமா அல்லது மதுபானங்களை விற்பனை செய்யும் மதுபான நிறுவனங்களிடம் வசூலிக்கப்படுமா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.