இலங்கையுடன் பேச்சுவார்த்தை - சர்வதேச நாணயநிதியம்
01.04.2022 09:25:44
இலங்கையுடன் எதிர்வரும் சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த மாதத்தின் முதல் பகுதியில் இடம்பெறவுள்ள நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.