ஏழு சிறுகோள்களைக் கண்டுபிடித்த ஏழு வயது சிறுமி

29.07.2021 08:18:47

ஏழு சிறுகோள்களைக் கண்டுபிடித்த ஏழு வயது சிறுமி நிக்கோல் ஒலிவேரா (Nicole Oliviera), உலகின் இளைய வானியலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விண்வெளி மற்றும் வானியல் மீதான விருப்பம் நிக்கோல் இரண்டு வயதாக இருந்தபோது வெளிப்பட்டது.

சர்வதேச வானியல் தேடல் (International Astronomical Search Collaboration) மற்றும் நாசா இணைந்து நடத்தும் ‘சிறுகோள் வேட்டை’ குடிமக்கள் அறிவியல் திட்டத்தில் (citizen science programme) நிக்கோல் ஒலிவேரா பங்கேற்றார்.

இரண்டு வயதாக இருக்கும்போது நட்சத்திரத்தை வாங்கித் தருமாறு தன் அம்மாவிடம் கேட்டார். அப்போதுதான் அவரது அறிவியல் ஆர்வம் வெளிப்படத் தொடங்கியது. அப்போது மகளுக்கு பொம்மை நட்சத்திரம் ஒன்றை வாங்கித் தந்தாலும், குழந்தைக்கு உண்மையில் என்ன தேவை என்பதை அம்மா கண்டுபிடித்தார். அதன் பிறகு, ஒலிவேராவின் அறிவியல் வேட்கைக்கு தீனி கிடைக்கத் தொடங்கிவிட்டது.

சமீபத்தில் பிரேசிலிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் வானியல் மற்றும் வானியல் தொடர்பான முதலாவது சர்வதேச கருத்தரங்கில் பேசுமாறு ஒலிவேரா கேட்டுக்கொள்ளப்பட்டார்.

ஒலிவேரா தனது வயதுக்கும் மீறிய அறிவாற்றலால், ஏற்கனவே பல பள்ளிகளில் விரிவுரைகளை வழங்கப் பழகிவிட்டார். அனுபவம் வாய்ந்த அறிவியலாளர்களுடன் பேசி, பல விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் இந்த சுட்டி வானியாலாளருக்கு கிடைத்திருக்கிறது.

ஆலிகோவாஸ் வானியல் ஆய்வு மையத்தின் சென்ட்ரோ டி எஸ்டுடோஸ் அஸ்ட்ரோனாமிகோ டி அலகோவாஸ் (Alagoas Astronomical Studies Center, Centro de Estudos Astronômico de Alagoas (CEAAL)) இன் இளைய உறுப்பினர் நிக்கோல் ஒலிவேரா என்பதும் 7 வயது சிறுமியின் அறிவியல் அறிவுக்கு சான்று.