ஈரான் சூளுரை!
இஸ்ரேலுக்கு பதிலடி வழங்க தங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்துவது திட்டமிட்டு வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்டதை பழி வாங்கும் விதமாக கடந்த அக்டோபர் 1ம் திகதி இஸ்ரேலை குறிவைத்து ஈரான் 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இவற்றில் அதிகப்படியான ராக்கெட்டுகளை இஸ்ரேலின் வான் தடுப்பு அம்சங்கள் தடுத்து நிறுத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. |
அதே சமயம் ஈரான் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுக்கும் என்று, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் பகிரங்கமாக சூளுரைத்தன. அதன்படி, கடந்த அக்டோபர் 28ம் திகதி தெஹ்ரான் மற்றும் மேற்கு ஈரானுக்கு அருகிலுள்ள ஏவுகணை தொழிற்சாலையை குறிவைத்து இஸ்ரேல் 3 அலைகளாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் Esmaeil Baghaei வழங்கிய தகவலில், சியோனிச ஆட்சிக்கு (இஸ்ரேலுக்கு) சரியான பதிலை வழங்க ஈரான் தங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும் என தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேலின் தாக்குதல் மட்டுப்படுத்தப்பட்ட சேதத்தையே ஏற்படுத்தி இருப்பதாக விவரித்தார். அதே சமயம் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, நிலைமையின் தீவரத்தை ஆராய்ந்து ஈரான் பலத்தை நிலைநிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இஸ்ரேல் தாக்குதல் குறித்து குறைத்தோ அல்லது மிகைப்படுத்தவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளார் |