காரைநகரில் காணி அளவீடு நிறுத்தப்பட்டது!
17.02.2021 09:31:30
காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படைத் தளத்துக்கு காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டுப் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வலந்தலை, ஜே – 47 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள அரை ஏக்கர் காணியே கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்படவிருந்தது.
காரைநகர் இந்துமகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான இந்தக் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக பிரதேச மக்களும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து முயற்சியை கைவிட்டு நில அளவீட்டு திணைக்களத்தினர் வெளியேறியிருந்தனர்.