வடக்கன் படத்தின் பெயர் மாற்றம்

04.06.2024 07:04:00

பாரதி சக்தி என்பவர் இயக்கத்தில் உருவான வடக்கன்' என்ற திரைப்படம் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுக்கு சென்சார் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

இதனை அடுத்து தற்போது வடக்கன்' என்ற டைட்டிலுக்கு பதிலாக ’ரயில்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு புதிய டைட்டில் உடன் கூடிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் வ்திரைப்படம் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர். 

வடக்கன்'  என்ற திரைப்படத்தின் டைட்டில் தற்போது ’ரயில்’ என்று மாற்றப்பட்ட நிலையில் புரமோஷன் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்த வட இந்தியர்களால் தமிழர்களுக்கு ஏற்படும் சிக்கல் குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.