குண்டுத்தாக்குதலில் 80 போ் பலி

25.10.2022 09:34:34

மியன்மாாின் வடக்கு மாகாணமான கச்சினில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சிறுபான்மையின அரசியல் அமைப்பின் ஆண்டு விழாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் இராணுவனத்தினர் மேற்கொண்ட விமானக் குண்டுத்தாக்குதலில் பார்வையற்றோர், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் அந்நாட்டு இராணுவ அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனினும் உயிரிழந்தவர்களில் பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இல்லை எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மியன்மார் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது நிராயுதபாணியான பொது மக்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதற்கு இராணுவ அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மியன்மாாில் கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்த போதிலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அந்த ஆட்சியை கலைத்த அந்நாட்டு இராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அத்துடன் ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது