தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!
|
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று இணையும் நிகழ்வானது மகாபலிபுரத்தில் உள்ள அரங்கில் பிரம்மாண்டமான நடைபெற்று வருகிறது. சுமார் 10,000 பேர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணை இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. |
|
இந்நிலையில் செங்கோட்டையன் கட்சியில் சேர வந்த முன்னாள் அதிமுக அமைச்சர்களை வரவேற்று பேசியதோடு எடப்பாடி பழனிசாமி மீது கட்சியினருக்கு ஏற்பட்ட முரண்கள் குறித்துப் பேசினார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு கட்சியின் துண்டை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதில் பெரம்பலூர் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், ஒரத்தநாடு மா.சேகர் முன்னாள் அமைச்சர் வளர்மதி, ராஜவர்மன் உள்ளிட்ட பலரும் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். |