பாகிஸ்தானை வீழ்த்துமா தென்னாபிரிக்கா? முதல் ரி-20 இன்று!

11.02.2021 10:21:57

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஹூர்- கடாபீ மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் தென்னாபிரிக்கா அணிக்கு குயிண்டன் டி கொக்கும் தலைமை தாங்கவுள்ளனர்.

முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி, முழுமையாக கைப்பற்றிய நிலையில், தற்போது ரி-20 தொடரை வென்று தென்னாபிரிக்கா அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.