விமான நிலையத்தில் பசிலுக்கு ஏற்பட்ட நிலை!

12.07.2022 09:19:24

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அதிதிகளுக்கான நுழைவாயிலில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.