சர்வதேசத்தின் கருத்துக்களை புறக்கணிக்கும் டிரான்.!

28.01.2024 03:01:00

எங்கள் நாட்டில், நாங்கள் விரும்பியபடி செயல்படுகிறோம், சர்வதேசத்தின் விருப்பப்படி நான் செயல்படவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பிரதேச சமூக காவல்துறை குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யுக்திய நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், யுக்தியை துவக்கி, நாட்டை சுத்தம் செய்ய நினைத்தேன், சில யூடியூபர்கள் போதைப்பொருள் மோசடியாளர்களின் பணத்தில் வாழ்கின்றனர், அவர்களை பயன்படுத்தி எம்மை விமர்சிக்கின்றனர்.


யுக்திய நடவடிக்கையை நிறுத்துங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையும் கூறியது, எங்கள் நாட்டில், நாங்கள் விரும்பியபடி செயல்படுகிறோம், சர்வதேசத்தின் விருப்பப்படி நான் செயல்படவில்லை.
பாதாள உலக குழு வழக்குகளில் வாதாடும் சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள், பாதாள உலக குழுவினர் மில்லியன் கணக்கில் பணம் ஈட்டுகின்றனர், பாதாள உலக குழுக்களும், போதைப்பொருள் வியாபாரிகளையும் வைத்திருக்க முடியாது, அவர்கள் இந்த நாட்டிற்கு ஒரு சுமை " எனத் தெரிவித்துள்ளார்.