14 வயது சிறுமிக்கு கத்திக்குத்து

03.09.2024 07:49:17

அமெரிக்காவில் புலம்பெயர் இளைஞர் ஒருவர், 14 வயது சிறுமியை கத்தியால் குத்தியதால் கைது செய்யப்பட்டார். இல்லினாய்ஸ் நகரில் உள்ள ஒரு மைதானத்தில் பேஸ் விளையாட்டு போட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் விளையாடிக் கொண்டிருந்த தனது சகோதரருக்காக 14 வயது சிறுமி போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

   

அப்போது டிமாஸ் கேப்ரியல் யானெஸ் (26) என்ற இளைஞர், குறித்த சிறுமியின் கையில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது தாயாரையும் அவர் குத்த முயன்றார்.

பின்னர் அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார். இறுதியில் யானெஸ் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு சோள வயலில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததால் முன்னர் நாடு கடத்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் யானெஸ் ஹோண்டுராஸுக்கு நாடுகடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவுக்கு திரும்பியதில் இருந்து யானெஸ் வேறு குற்றங்களை செய்திருக்கலாம் என விசாரணை நடத்துபவர்கள் நம்புகிறார்கள்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி உள்ளூர் மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்றார்.

இல்லினாய்ஸ் மற்றும் சிகாகோ பகுதிகள் அமெரிக்காவின் புலம்பெயர்ந்தோர் நெருக்கடியின் முக்கிய மையங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.