தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கு!

20.04.2024 07:03:56

அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஜூனில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
 

இந்நிலையில் இப்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நவீன் எர்னேனி மீது தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. இது சம்மந்தமாக சென்னுபட்டி வேணுகோபால் என்பவர் அளித்த புகாரின் பேரில் நவீன் எர்னேனி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு பிரச்சனை ஏதும் எழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.