கனடாவில் இரண்டு முக்கிய வரிவிலக்குகள் அறிவிப்பு!
கனேடிய அரசு தனது குடிமக்களுக்கான வரிவிலக்கை அதிகரிக்கும் வகையில் இரு முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதில், பணி செய்யும் கனடா குடிமக்களுக்கு $250 வரிச்சலுகை மற்றும் குறித்த காலத்திற்கான GST விலக்கு அடங்கும். 1- பணியாளர்களுக்கான $250 தள்ளுபடி (Working Canadians Rebate) 2023-ஆம் ஆண்டு வேலை செய்த மற்றும் $1,50,000 வருமானம் வரை ஈட்டிய கனடா குடிமக்கள், 2025-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் $250 தள்ளுபடி பெறுவார்கள். இது வரியிலிருந்து விடுவிக்கப்பட்ட தொகையாக இருக்கும். |
இது தானியங்கி முறையில் direct deposit அல்லது காசோலை (cheque) மூலம் செலுத்தப்படும். இது 18.7 மில்லியன் கனடியர்களுக்கு பொருந்தும். 2- GST விலக்கு 2024 டிசம்பர் 14 முதல் 2025 பிப்ரவரி 15 வரை, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு பொருட்களுக்கு GST/HST விலக்கு வழங்கப்படும். உணவுப்பொருட்கள், குழந்தைகள் உடைகள், புத்தகங்கள், உணவக உணவுகள் போன்றவற்றில் இந்த விலக்கு பொருந்தும். இரண்டு மாதங்களுக்கு தகுதியான பொருட்களில் GST விலக்கால் குடும்பங்கள் சுமார் $100 சேமிப்பை பெறுவார்கள். இந்த நடவடிக்கைகள், கனேடியர்களின் செலவுகளை குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. |