பத்திரிகையாளர் உறவினர் கொலை

22.08.2021 15:17:45

ஆப்கன் தலைநகர் காபூலில், தலிபான்கள் வீடு வீடாகச் சென்று வெளிநாட்டு பத்திரிகையாளர்களை களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, ஜெர்மனியைச் சேர்ந்த, டச்சு வெல் பத்திரிகையின் நிருபர் ஒருவரை தேடிச் சென்ற போது, அங்கிருந்த அவரது உறவினர்களை தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் தப்பி விட்டனர். இந்த சம்பவத்திற்கு, டச்சு வெல் பத்திரிகையின் தலைமை இயக்குனர், பீட்டர் லிம்போர்க் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் தேடி வந்த பத்திரிகையாளர், தற்போது ஜெர்மனியில் உள்ளார்.