யாழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை.

21.08.2025 08:19:07

நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இதனை அறிவித்துள்ளார். 

இந்த விடுமுறைக்கான பதில் பாடசாலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.