மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: 3ம் அலை தவிர்ப்போம்!
10.08.2021 08:24:35
கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த, கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த பிறகும், கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கூட்டம் தவிர்க்கவும், மூன்றாம் அலையை தவிர்க்கவும், ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம்.
கொரோனா தொற்று பரவல் தடுக்க, மாநில அளவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறைகளுடன், கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.மக்கள் அதிகம் கூடும் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, சாரமேடு சாலை, என்.பி. இட்டேரி சாலை, துடியலுார் சந்திப்பு, எல்லைத் தோட்ட சந்திப்பு ஆகியவற்றில் செயல்படும் கடைகள், ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.