டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
21.01.2025 08:17:32
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக்கொண்டுள்ளார்
இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்டுள்ள டிரம்பிற்கு உலக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியும் டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வெற்றிகரமான பதவிக்காலமாக அமைய வாழ்த்துக்கள் என்றும் நெருங்கிய நண்பர் டிரம்ப் உடன் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன். எனவும் தெரிவித்துள்ளார் .