"இப்போது உள்ள அரசியல் அதற்கு மட்டும் தான்".
27.11.2025 14:01:00
|
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் அர்ஜுன். இவரை ஆக்ஷன் கிங் அர்ஜுன் என மக்கள் செல்லமாக அழைப்பார்கள். ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன், ஏழுமலை, ரிதம் என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் லியோ, விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டியுள்ளார். |
|
இந்நிலையில், அரசியல் குறித்து அர்ஜுன் சில அதிரடி விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "பலர் என்னை அரசியலுக்கு அழைத்தனர், ஆனால் அரசியலில் தவறு செய்தால் தட்டி கேட்க முடியாது. தற்போது இருக்கும் அரசியல் எல்லாம் பணம் தான். நமக்கு மேல் உள்ளவர்கள் செல்வதை கேட்டு நடக்க வேண்டும். அது என்னால் முடியாது" என்று தெரிவித்துள்ளார். |