ஆகஸ்ட் மாதம் 2400 டெங்கு நோயாளர்கள் பதிவு

24.08.2024 09:29:07

ஆகஸ்ட் மாதத்தில்  இதுவரையான காலப்பகுதியில்  2,400 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணம் மற்றும் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனோமா தீப்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.