தொடர்ந்து இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள்!

07.08.2021 06:03:00

ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரி சில தொழிற்சங்கங்கள் கடந்த 4 ஆம் திகதி கண்டியில் ஆரம்பித்த பேரணி இன்றைய தினம் 4 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, இன்று முற்பகல் 10 மணிக்கு பஸ்யால நகரில் ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி யக்கல நகரில் நிறைவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி ஆசிரியர், அதிபர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டம் இன்று 27வது நாளாகவும் தொடர்கின்றது.