பத்திரிகையாளர்களை தாக்கிய தலிபான்கள்

10.09.2021 14:12:14

பத்திரிகையாளர்களை தலிபான்கள் தாக்கிய இரண்டு புகைப்படங்களை 'லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்' பத்திரிகையாளர் மார்கஸ் யாம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் இரண்டு பத்திரிகையாளர்கள் உள்ளாடையுடன் நிற்க வைக்கப்பட்டு பின்புறத்திலிருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. அவர்களது உடலில் காயங்கள் காணப்படுகின்றன.

தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்களான தகி தர்யாபி மற்றும் நெமத்துல்லா நக்தி ஆகியோர் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என, 'எதிலாட்ரோஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துஉள்ளது.'மேற்கு காபூல் கார்ட்-இ-சார் பகுதியில் பெண்கள்நடத்திய போராட்டம் குறித்த செய்தியை இருவரும் சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை தலிபான்கள் கடத்தி சென்று அறையில் அடைத்து வைத்து தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர்' என, எதிலாட்ரோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.