இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்- பதற்றமான நிலை

13.07.2022 09:38:19

பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவகையான பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவரும் நிலையில் அங்கு கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பு வானில், மிகவும் தாழ்வாக ஹெலிகள் வட்டமிட்டு பறந்துகொண்டிருக்கின்றதாக கொழும்ப்த்தகவல்கள் தெரிவிக்கின்றமை மேலும் அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.