தவெக அரசின் பட்ஜெட்டை விமர்சித்த ஸ்டாலின்!

05.08.2026 15:46:36

'Blast Blast' ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, 'Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கிறது இந்த தவெக அரசின் முதல் பட்ஜெட் என திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தவெக அரசின் முதல் நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். தவெக அரசின் பட்ஜெட்டை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

   

மாற்றம் மாற்றம் என்று சொல்லிவிட்டு வெறும் பெயர் மாற்றங்கள் மட்டுமே உள்ளதாக திமுக விமர்சித்துள்ளது. இந்த பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட TN Budget 2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, 'Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு! அதுமட்டுமல்ல, இது Dravidian Model-அரசின் திட்டங்களின் Remake Version budget! மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!

அதுமட்டுமல்ல, ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்! மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத - சொன்னதையும் செய்யாத - சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் 'ரீல் அரசின்' முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.