ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 10 கப்பல்கள்.

31.03.2026 08:07:49

மத்திய கிழக்கு போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை பகுதியில் இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கான சரக்குகளை ஏற்றி வந்த 28 கப்பல்கள் சிக்கியுள்ளன. இதில் 10 வெளிநாட்டு கொடி ஏந்திய கப்பல்களும், 18 இந்திய கப்பல்களும் அடங்கும். இந்த கப்பல்களில் சமையல் எரிவாயு , கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு  ஆகியவை கொண்டு வரப்படுகின்றன. சுமார் 485 மாலுமிகள் இந்தக் கப்பல்களில் உள்ளனர்.

மத்திய கிழக்கு போரினால் ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காப்பீட்டுக் கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 40% கச்சா எண்ணெய் மற்றும் 90% சமையல் எரிவாயு இறக்குமதி இந்த வழியாகவே நடைபெறுவதால், இது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதுவரை 8 இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளன. மற்ற கப்பல்களை பாதுகாப்பாகக் கொண்டு வர ஈரானுடன் தூதரக ரீதியாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.