செம்பியன்பற்றில் வெடிக்காத குண்டு மீட்பு!

20.10.2026 08:52:48

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டு ஒன்று, மருதங்கேணிப் பொலிஸாரால் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளது.

செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர், நாவற்பழம் பறிப்பதற்காகக் காட்டுப் பகுதிக்குச் சென்றபோது, அங்கு குறித்த குண்டைக் கண்டுள்ளார். இதனையடுத்து, உடனடியாக அவர் மருதங்கேணிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணிப் பொலிஸார், வெடிக்காத நிலையில் காணப்பட்ட குண்டைப் பாதுகாப்பான முறையில் அகற்றிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.