வசூலில் சாதனை படைக்கும் அனிமல் திரைப்படம்.. இதுவரை இத்தனை கோடியா
09.12.2023 09:35:33
அனிமல்
அனிமல் படத்திற்கு ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட மறுபக்கம் வசூல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுன் கூட இப்படத்தை புகழ்ந்து பாராட்டி பதிவை வெளியிட்டு இருந்தார்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ரூ. 500 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்தது.
இந்நிலையில், இதுவரை அனிமல் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.